திங்கள், 28 மே, 2012

என்னுடைய பார்வையில் கடவுள்....



இந்த பதிவை படித்து முடிக்கும் வரை ஒரு ஒரு நிமிடம் கடவுள் என்பதை பற்றி நாம் இது வரை எண்ணி வந்ததை அப்படியே நிருத்திவிடுவோம். அப்போதுதான் கடவுளை பற்றி நான் என்ன கூற முயல்கிறேன் என எளிதில் உணரலாம்.




உலகைப் படைத்தது யார்..?

உயிரை படைத்தது யார்..?

நம்மை இயங்கச் செய்வது யார்..?

இது அணைத்திற்க்கும் காரணம் யார்..?

இதற்கு என்னால் இரண்டு பதில்கள் பொருந்தும் விதத்தில் கூற முடியும்


1.இவையனைத்தும் எதேட்சையாக நடந்திருக்கும்.

அதாவது அணைத்தும் எதிர்பாராமல் நடந்திருக்கலாம்.

கணித கோட்பாடான நிகழ்தகவின் (probability) படி பார்த்தால்,
நம் பெருவெளியில் எத்தனையோ கோடி கோள்கள் உள்ளன.
அதில் உயிர்கள் வாழ ஏதுவான இடத்தில் ஒரு கோள் அமைந்ததற்கு நாம் வியக்க வேண்டியதில்லை. அப்படி அமையப்பெற்றதுதான் நம் பூமி,அதில் தோன்றிய உயிர்கள் மற்றும் அணைத்தும்.

ஆனால் பூமியானது உயிர்வாழ முழுதும் தகுந்த இடமாக உள்ளதே, ‘ஒரு சிறந்த ஆசிரியர் இன்றி சிறந்த மாணவன் உண்டாக முடியுமா?’, ‘ஒரு சிறந்த குயவன் இன்றி சிறந்த பாணை உண்டாகுமா?’, ‘ஒரு சக்தி இல்லாமல் இது முடியுமா?’ என நமக்கு தோன்றும்.

2.எனவே ஒரு சக்தி இதை செய்கிறது என கொள்ளலாம். அதை நாம் இயற்கை சக்தி என வைத்துக்கொள்வோம். கடவுள் என்றாலும் சரியே.

அடுத்தது இப்படி ஒரு சக்தி இருக்கிறது என்றால், அதன் வலிமை, அதன் பலம், அதன் ஆற்றல், சக்தி எந்த அளவு இருக்கும் என ஆராய்வது மிக மிக முக்கியமான ஒன்று.

இது 'அளவு கடந்த, நினைத்ததை உடனே நடத்தி முடிக்கக் கூடிய, தவறே செய்யாத,நம்மை ஆபத்திலிருந்து காக்க கூடிய ஒன்றா? 'என கேட்டால் இல்லவே இல்லை என்பதுதான் என் பதில். இதற்கு ஆதாரம் தருகிறேன். ஏனெனில்
ஆராயாமல் பிறர் கூறுவதை உன்மைதான் என்று சிந்திக்காமல் கடைபிடிப்பவன் மூடன் என்று, நான் கூறவில்லை ஐயன் வள்ளுவன் கூறியுள்ளான்.

ஆதாரம் 1.

    இந்த ‘இயற்கை அல்லது கடவுள் சக்தி’ எல்லையற்ற ஆற்றல் பெற்றது எனில் இந்த பூமியை ஒரே கணத்தில் படைத்து. அடுத்த கணத்தில் சூரியனை, தாவரங்களை படைத்து அதற்கு அடுத்த கணத்தில் விலங்குகளை படைத்து அதையுண்ணும் விலங்குகளையும் படைத்திருந்திருக்கலாம்.
 ஆனால் அவ்வாறு நடந்ததா?. இல்லையே.
 பெருவெடிப்பு நடந்தது, சூரியன் உண்டானது. அது உடைந்து பூமி வந்தது. அது நன்கு எரிந்து ,அவைந்தது. குளிர்ந்த்து. இப்படி பல லட்சோப லட்ச ஆண்டுகள் கூடித்தான் இந்த பூமியை உருவாக்கியது. ஏனெனில் இந்த கடவுள் அளவான சக்தி யுடையதே , உடனே நினைத்ததை முடிக்க அதனால் இயலாது.


ஆதாரம் 2.

     ஆம் இதற்கான சான்றுதான் பரிணாம வளர்ச்சி.
ஒரு தட்சன் ஒரு மரப்பிடி செய்து அது மண்வெட்டியுடன் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வான் மீண்டும் செதுக்கி பொருத்துவான் . அதைத்தான் இயற்கை செய்கிறது.
முதலில் பாம்பை காலுடன் படைத்தது. அது அதை அதிகம் பயன்படுத்தாமல் இருந்ததால் அதை நீக்கி விட்டது.
மனிதனுக்குகூட கீழ் முதுகில் பயனற்ற சிறு எலும்பு உள்ளதாம்.
அது முன்னர் வாலாய் இருந்து. பயன் படுத்தாமல் இருந்ததால், தேய்ந்ததாம். வரும் காலத்தில் அது முற்றிலும் மறைந்துவிடுமாம்.
இதன்மூலம் நாம் உணர்வது இந்த இயற்கை அல்லது கடவுள் சக்தி தவறு செய்யக்கூடியது.
அதை உணர்ந்து மற்ற வெகு காலம் ஆகும்.


ஆதாரம் 3.   

இயற்கை தாவரங்களை படைத்து. பின்னர் ஏன் அதையுண்ணும் விலங்குகளையும் படைத்தது?. தாவரத்தை கடவுளுக்கு பிடிக்காததனாலா?
இல்லை, விலங்குகளை கடவுளுக்கு பிடித்ததனாலா? அப்படி பிடித்திருந்தால்
ஊண் உண்ணிகளை படைத்திருக்காதே..!
ஒரே  ஒரு காரணம்தான் “இயற்கை ஒரு சமநிலை விரும்பி”.
தாவரத்தை கட்டுப்படுத்த விலங்குகளையும் அதை கட்டுப்படுத்த ஊண் உண்ணிகளையும் படைத்தது.
கொள்ளப்படுதலும் கொள்ளுதலும் இதன் படைப்பே.
ஒன்றை யோசியங்கள் நமக்கு தீமை செய்பரை கடவுள் தண்டிப்பார் என்றால் நாம் எத்தனை தாவரங்களை கொல்கிறோம். இதற்கு கடவுள் நம்மை தண்டிப்பார் என்றால் நாம் படைக்கப்பட்டிருப்போமா. நலமாக வாழ்வோமா?
இருந்தாலும் இயற்கை நம்மை படைக்கிறது. பிற ‘உயிரை கொள்ளும் மிருகங்களையும்’ படைக்கிறது.
ஏன் ?
காரணம் இயற்கை அல்லது கடவுளை பொறுத்தமட்டில் தீமைகள் என்று ஏதும் இல்லை.
 உண்மை என்னவென்றால் இவை (தீமை செய்பவை என கருதப்படுபவை) படைக்கப்பட்டதன் நோக்கமே நாம் 'கொடியது' என நிணைப்பதை செய்வதற்க்குத்தான்.
மான் கடவுளை வணங்கினால் புலிகளெல்லாம் சைவமாகிவிடுமா?
ஆவப்போவதில்லை, புலியை சமாளிக்க திறன் இருந்தால் மான் வாழட்டும்.
நாம் கடவுளை வணங்கினால் மட்டும் எப்படி நம்மை நாடும் தீயன நீங்கிவிடும்?


கடைசி ஆதாரம்

 கடல் ஆண் சீல்களில் 90 இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை
 காரணம் என்னவென்று தெரியுமா?
 பலம் வாய்ந்த ஒரு ஆண் சீல் தன் பகுதியில் உள்ள அணைத்து பெண்களையும் கைப்பற்றி விடும் . ஏதேனும் ஓர் இளம் ஆண் சீல் உணர்ச்சிவசப்பட்டு ஏதேனும் செய்துவிட்டால் அதற்கு மரணதண்டனைதான்.
இப்படி படைக்கப்பட காரணம் என்ன கடவுள் கொடுமை காரனா?
ஆம் நமக்கு அவ்வாறுதான் தெரியும். ஆனால் இயற்கையின் மற்றொரு
கொள்கை இங்கு உள்ளது.
பலமுள்ளவை நிலைத்திருக்கும் என்பது.(Fittest will survive)
பலமுள்ள சீல் பலமுள்ள சந்ததியை உருவாக்கும் .பலமற்றது பலமற்ற சந்ததியை உருவாக்கும்.
இதன் விளைவை யோசித்து பாருங்கள்.
அந்த பலமற்றது நன்றாக தன் உடலை வலுப்படுத்தும்.
இவ்வாறு எல்லா இளம் சீல்களும் எண்ணும் இதனால் ஒரு வலிமையான சீல் சமூகம் உண்டாகும்.
என்ன இயற்கையின் அறிவு.

இப்படிப்பட்ட இயற்கைக்கு நன்றி கூறலாம்.
வேண்டுதல் என்பது தேவையற்றது.
அதை வேண்டுவதால் ஆவது ஒன்றுமில்லை.
நாம் வேண்டுவதையும் அது நிரைவேற்றப்போவதில்லை.
நாம் வேண்டுவது அதற்கு தெரியப்போவதுமில்லை.
அதைத்தான் எனது முதல் பதிவான
கடவுளை வணங்கவேண்டுமா........?ல்

பதித்திருந்தேன்

சரி கடவுள் எல்லைகளற்றவர் என நம் முன்னோர்கள் கூறி வந்தனரே
அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று எனது பதிவான
வாங்க யோசிக்கலாம் 'கடவுள்' எனும் கற்பனையைப் பற்றி..!–ல்

கூற முயன்றுள்ளேன்.

இப்போது இந்த பதிவு எனது கடவுள் பற்றிய கருத்தையும் முந்தைய பதிவுகளுக்கு எனது பதிலாகவும் அமையும் எனும் நம்பிக்கையில் முடிக்கும் உங்கள் நன்பன்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.



நன்றி


சிந்திப்போம் சீர்பெறுவோம்...
 



சனி, 26 மே, 2012

வாங்க யோசிக்கலாம் 'கடவுள்' எனும் கற்பனையைப் பற்றி..!



இதில்   என்னுடைய சொந்த கருத்துக்களை  பதித்துள்ளேன் .

இவை நாம் சிந்திப்பதற்கே...!


ஒவ்வொரு  மதமும்  ஒரு  கடவுளை  அல்லது  ஒருவரை  கடவுளாக  கொண்டு  செயல்பட்டுவருகிறது. ஏன் ?
முதலில்  நாம்  ஒன்றை  உணர  வேண்டும் . நமது  தலையில்   துப்பாக்கி  வைத்து,  ‘இரண்டாவது  மாடியிலிருந்து  குதி   இல்லை   என்றால்  சுட்டுவிடுவேன்’  என்றால்  நாம்  என்ன  செய்வோம்? ‘குதித்துவிட்டால்  கூட  பிழைத்துவிடலாம்’  என்று  நினைத்து  குதித்துவிடுவோம். அமெரிக்க இரட்டை  மாடி இடிப்பில் இது போல் நடந்தது நமக்கு நினைவிருக்கும்.  
காரணம் என்ன? "மரணபயம்". இது ஒருவனை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும்.

      மதங்கள் யாவும் மனிதனை நெறிப்படுதவே தோற்றுவிக்கப்பட்டன. மனிதர்களுக்கு இடையில் நல்ல எண்ணங்களை வளர்த்து, தீய செயல்களில் அவர்களை ஈடுபடாமல்  தடுக்க  தோற்றுவிக்கப்பட்டன.
ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிதானதாஇல்லையே.
எனவே கடவுள் என்னும் கற்பனையை மதங்களை தோற்றுவித்தவர்கள்  மதங்களில் புகுத்தினர்.
"அவன் ஒப்பற்றவன்","நம்மை படைத்தவன்","நம் நன்மை தீமைகளை கணக்கு வைத்திருப்பான்"
"தீயவர்களை தண்டிப்பான்" என்றெல்லாம் மதங்கள் வழியாக கற்பனைகளை பரப்பினர். மரணபயத்தை ஏற்படுத்தினர் .
     மேற்கண்டவைகளுக்கு எந்த  வித மாற்று கருத்துகளும் கொண்டிராத   சூழலில் மனித  சமூகம்  இருந்ததால் இவற்றை எல்லாம்  நம்பவும்    தொடங்கின.
மனிதர்கள்   எளிதில்  புரிந்துகொள்ள  கடவுளுக்கு உருவம் கொடுக்க எண்ணினர். உயிர்களில் மனித இனம் தான் உயர்ந்தது என எண்ணியிருந்ததால் கடவுளுக்கு மனித உருவமும், மனிதனிலிருந்து உயர்த்திக்காட்ட அதிக கைகள் போன்ற மாற்றங்களும், பயத்தை உண்டாக்க ஆயுதங்களும் தரப்பட்டன.        
  இவைகள் காலப்போக்கில்  அழியக்கூடும் என்பதால் கோவில்கள் கட்டி காலத்தால் அழியாத கற்களில் சிலை செதுக்கி வைத்தனர்.

இந்த மதங்கள் எவ்வாறு பரவின என்று பார்த்தால், அதற்க்கு மன்னர்கள் ஒரு முக்கிய  காரணமாக இருந்தனர் என்று உணரமுடியும். மதங்களின் பிறப்பு கண்டிப்பாக நன்மைகளை உண்டாக்கும் என்று உணர்ந்த மன்னர்கள் அதன் வளர்ச்சிகளுக்கு பெரிதும் வித்திட்டனர். அதை பரம்பரை பரம்பரைகளாக செய்தும் வந்தனர் என்பதற்கு அவர்களின் வரலாறுகளும், அவர்கள் கட்டிய கோவில்களுமே சாட்சி.
நம்மிடம்தான் ஒரு கெட்ட பழக்கம் உள்ளதே. பிரபலமானவர்களும், தலைவர்களும் என்ன செய்தாலும் நாமும் அதை செய்வது.
எனவே மதங்களும்,கடவுள்களும் வேகமாக பரவின.

 “எப்போதும் கடவுளை நினைத்திருந்தால் நன்மைகள் நடக்கும்என்று கூறுவதன் உள்-அர்த்தம் "தவறு செய்தல் கடவுள் தண்டிப்பார் " என்ற பயத்தை ஏற்படுத்தி, அவனை எப்போதும் கட்டுப்படுத்திவைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தான்.
ஆனால்,’கடவுள் தீயவர்களை தண்டிப்பார்என்று அவர்களால் நிரூபிக்க இயலவில்லை.
அதனால்,

    " அரசன் அன்றே கொள்வான்  , தெய்வம் நின்று கொள்ளும்"

என்றனர்.
நல்லவர்களுக்கு துன்பங்கள் ஏற்படும்போது
  "நல்லவர்களை கடவுள் சோதிப்பார், கைவிடமாட்டார்"
என்றனர்.

நல்லவர்களுக்கு பெருந்துயர் உண்டாகும்போது கடவுளை  நிரூபிக்க ,

"இவையெல்லாம் முற்பிறவி வினைகள்"

என்றனர்.
கடவுளுக்கு எதிராக கேள்விகள் எழும்போது

" நம்பினால் மட்டுமே  கடவுளை உணரமுடியும் "

என்று சப்பை கட்டு கட்டி சமாளிக்க முயன்றனர்.

இவ்வாறு கடவுளை காப்பாற்றுகிறான்  மனிதன்.

என்னதான்  மதங்களின் நோக்கம் மனித சமூகத்தை நெறிப்படுத்தஎனினும் , அது  கையாண்ட முறை (மக்களுள் பயத்தை விதைப்பது) தவறானது . இதுவே இதன் வீழ்ச்சிக்கும்  காரணமாகவும்  அமைகிறது.
பிற்காலத்து   சுயநலவாதிகளும், மூடர்களும்   மதங்களை கைப்பற்றி இவற்றின் உன்னத  செயல்பாடுகளை  மூட நம்பிக்கைகளாக மாற்றவிட்டனர்.
மத வெறியையும் , மதகலவரங்களையும்  உண்டாக, மதங்கள் மற்றும் கடவுள்கள்  உருவான  நோக்கங்களை சரியாக புரிந்துகொள்ளததே காரணம் என்று  தற்போது புரிந்துகொள்ள முடிகிறது.



 நன்றி

மாற்று கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

புதன், 16 மே, 2012

கடவுளை வணங்கவேண்டுமா


கடவுளை வணங்கவேண்டுமா........?
     முதலில் கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
    இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன். இது முழுக்க முழுக்க சிந்திப்பதற்கே.

வழிபடத் தேவையான குணங்கள் கடவுளிடம் உள்ளனவா...?
     பரிவு.
           கடவுளிடம் இது இல்லை என்பதை எளிதில் உணரலாம். அது இருந்திருந்தால் சுனாமியால் 230,000 பேர் உயிரிழப்பார்களா?
          இதற்கு காரணம் அவர்கள் செய்த பாவங்கள் என்று கூறுவார்கள். அதில் மாண்ட மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள் கட்டியோ, அடைத்தோ வைக்கப்பட்டிருந்த விலங்குகள் ,கும்பகோணத்தில் தீயிற்கு இறையான குழந்தைகள்,தான் யார் என்றே உணரமுடியாத, ஏர்வாடி மணநல காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் கருகிப்போன உயிர்கள் என்ன பாவம் செய்தனர் இவர்களெல்லாம்? யாரை ஏமாற்றி பணம் சேர்த்தனர்? யாரை கொன்று பழி தீர்த்தனர்? இவைகளையெல்லாம் கண்களால் பார்த்தால் கல் நெஞ்சுக்காரன் ஹிட்லர் கூட மணம் நெகிழ்ந்துவிடுவான். அவனை விட கொடியவனா கடவுள்?
         இதற்கு காரணம் அவர்கள் செய்த  முன்பிறவி விணைகள் . அதற்கான தண்டனைகள்தான் இவை என்றும் கூறுவார்கள். தண்டனைகள் எதற்கு தரப்படுகின்றன? தவறை உணர்த்துவதற்காகவா? இல்லை ஒரு உயிரை துன்புறுத்தவா? முன்பிறவி விணைகளால் இந்த பிறவியில் என்ன தவறு செய்தோம் என்றுகூட நிணைவில்லாத , தெரியாத நிலையில் இவர்கள் அனுபவிக்கும் இந்த தண்டனை அவர்களை எவ்வாறு திருத்தும்? இவ்வாறு தண்டிப்பது எப்படிப்பட்ட முட்டாள்தனம்! இதை செய்பவர் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்கவேண்டும்! இவ்வாறு செய்த தவறு என்ன என்று உணர முடியாத நிலையில் உள்ளவர்களை தண்டிக்க சாதாரண இந்திய அரசியல் சட்டத்திலேயே இடம் இல்லை. ஆனால் கருணையே வடிவான கடவுள் இதை செய்கிறது. இதற்குத்தான் இதை வழிபடுகிறோமோ?
      மேலும் எல்லாம் அவன் செயல்” ”ஆட்டிவைப்பவன் அவன்என்றெல்லாம் கூறுகிறோமே,இவ்வாறு பார்த்தலும் முன்பிறவியில் பாவங்கள் செய்ய பயன்பட்ட கருவி மட்டும் தான் நாம் செய்ய தூண்டியவன், செய்தவன் கடவுள். பொதுவாக நாம் ஒரு கொலையை செய்தவனை தண்டிப்போமா? இல்லை கொலை செய்ய பயன்பட்ட கத்தி போன்ற கருவியை தண்டிப்போமா?. தான் செய்த குற்றத்திற்காக பிறரை தண்டிக்கும் நயவஞ்சகன்தான் கடவுளா?
    வழிபடுதல்
    வழிபடுதல் என்பது நன்றி கூறுவதற்காக நடத்தபடக்கூடியது என்ற போதிலும் தற்போதைய வழிபாடுகள் யாவும் வேண்டுதல்களாகவே இருக்கின்றன.
   கடவுளிடம் முறையிட்டு எனக்கு அதை கொடு உனக்கு இதை தருகிறேன் தேங்காய் தருகிறேன் என்ற வியாபாரமாகவே பெரும்பாலும் இது நடைபெருகிறது.

     58 நாட்கள் தன் உடலை வருத்தி நோன்பு இருந்து பத்து மைல் தொலைவு நீளமுள்ள வரிசையில் உண்மை பக்தன் வாரக்கணக்கில் நின்றுதான் கடவுளை தரிசிக்கிறான். நேற்றிரவு வந்து குளுகுளு விடுதியில் குடியும் கும்மாளமுமாய் தங்கிவிட்டு இன்று கலையில் கடவுளுடன் விக்ஷேக்ஷ பூஜையில் இணைகிறான் மற்றொறுவன்.

   இவ்வாறு பணத்தை கண்டால் வாய்பிளக்கும் பிணம் தான் கடவுளா?
   மேலும் கடவுளை வழிபட்டால் பிடித்துள்ள பீடைகளூம், கிரகங்களும் நீங்குமாம். இது எவ்வாறு உள்ளது என்றால் நீ என் காலை பிடித்து பூஜித்தால் நீ நன்றாக இருப்பாய் இல்லையெனில் நாசமாய் போய்விடுவாய் என்று கூறுவது போல் இல்லை. இதற்கு பிறகும் நாம் அதை வழிபட்டே ஆக வேண்டுமா?
  இந்த கட்டுரைக்கான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தொடர்புக்கு
         nandu_k61@yahoo.com